கோட்டை முன் மறியல்-மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
சென்னை: கோட்டை முன் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 12 மாணவ, மாணவிகளுக்கு மண்டை பிளந்தது. இது தொடர்பாக 10 மாணவிகள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
சட்டசபையில் நாளை கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கவுள்ள நிலையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி இந்திய மாணவர் கூட்டமைப்பினர் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந் நிலையில் செல்வா, கனகராஜ் தலைமையில் இந்த அமைப்பைச் சேர்ந்த 10 மாணவிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தடையை மீறி கோட்டை நோக்கி செல்ல முயன்றனர்.
ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக ஊர்வலகமா வந்த அவர்களை போலீசார் தடுத்தபோது மாணவர்கள் அடங்காமல் தொடர்ந்து முன்னேறினர்.
இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மாணவ, மாணவிகள் ஓடஓட விரட்டிச் சென்று அடித்தனர். இதில் 12 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து 10 மாணவிகள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்தால் கடற்கரை சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications