இன்னும் அணை கட்ட ஆரம்பிக்கலையே.. ஆந்திரா
ஹைதராபாத்: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், இன்னும் அணை கட்டும் பணியை தொடங்கவில்லை என்றும் ஆந்திர அரசு கூறியுள்ளது.
சென்னை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் பாலாற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர அரசு அணை கட்டி வருவது குறித்து தமிழக சட்டசபையில் பிரச்சனை கிளப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதல்வர், ஆந்திராவின் இந்தச் செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், அணை கட்டும் நடவடிக்கையை ஆந்திர அரசு நிறுத்த வேண்டும் என்றும், இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இதை தமிழக அரசு சட்டரீதியாக எதிர் கொள்ளும் என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் ஆந்திர நீர்ப்பாசனத் துறை அமைச்சர் லட்சுமையாவிடம் நிருபர்களிடம் பேசுகையில்,
பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவது தொடர்பாக இதுவரை சில வடிவமைப்புப் பணிகள் தான் செய்யப்பட்டுள்ளன. அதை தமிழக அரசுடனும் பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்தத் திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
அதே நேரத்தில் இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்று எங்களால் சொல்ல முடியும்.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆந்திரா இன்னும் தொடங்கவில்லை என்பதால், இதில் இப்போது எந்த சர்ச்சையும் இல்லை.
அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்து இருக்கிறோம். எனவே அங்கு கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.
தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தல்..
இந் நிலையில் இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கிளப்பினர்.
அதிமுக எம்பி தம்பிதுரை மக்களவையில் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டுவிட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு அணை கட்டி வருவதையும் தடுக்க வேண்டும் என்றார்.
அதே போல திமுக, அதிமுக எம்பிக்கள் காவிரிப் பிரச்சனையையும் கிளப்பினர். உரிய நேரத்தில் கர்நாடகம் நீரைத் திறந்துவிடாமல் இருந்ததை சுட்டிக் காட்டினர்.
இப்போது மழையால் அணைகள் நிறைந்த பின்னர் அணைகளைக் காப்பாற்றிக் கொள்ள கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications