முதல் நானோ 'ரிலீஸ்'-சாவியை வழங்கினார் டாடா

மும்பையில் தனது முதல் வாடிக்கையாளருக்கு இன்று நானோ கார் சாவியை வழங்குகினார் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா.
2003ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு தடைகள் மற்றும் பிரச்சினைகளைச் சந்தித்து 6 ஆண்டுகள் தாமதமாக இன்றுதான் முழுமையடைகிறது.
இந்தத் திட்டத்தை மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் தொடங்க முடிவு செய்தார் டாடா. நானோ தொழிற்சாலையின் 75 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக அம் மாநிலத்திலிருந்து தனது கார் திட்டத்தை வாபஸ் பெற்ற ரத்தன் டாடா, குஜராத்தில் அதற்கான பணிகளை மேற்கொண்டார்.
இந்த நடைமுறைச் சிக்கல்களில் சிக்கி நானோ வெளிவருவது தடைபடக் கூடாது என விரும்பிய டாடா, உடனடியாக தங்களின் பந்த் நகர் ஆலையில் நானோவைத் தயாரிக்க உத்தரவிட்டார். இப்போது வெற்றிகரமாக 1.55 லட்சம் கார்கள் தயாராகிவிட்டன.
இந்தக் கார்களுக்கு மொத்தம் 2.5 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இவர்களில் 1.55 லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, கார்கள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு படிப்படியாக கார்களை டெலிவரி செய்வது இன்றுமுதல் துவங்கியது.
முதல் காரை தனது வாடிக்கையாளருக்கு ரத்தன் டாடாவே நேரில் வழங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications