ரீட்டாவை மன்னிக்க மாட்டேன்-மாயா ஆவேசம்

ரீட்டா விவகாரம் குறித்து இன்று முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசினார் மாயாவதி. அப்போது அவர் ஆவேசமாக காணப்பட்டார்.
மாயாவதி பேசுகையில், ரீட்டா பகுகுணா பேசிய தரக்குறைவான பேச்சு தொடர்பாக இதுவரை காங்கிரஸ் மேலிடம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரீட்டாவின் பேச்சுக்காக சோனியா காந்தி இதுவரை மன்னிப்பு கேட்கவே இல்லை.
இதன் மூலம் சோனியா சொல்லித்தான் ரீட்டா பேசியிருப்பாரோ என்ற எண்ணம் எழுகிறது.
எங்களது கட்சி எம்.பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபாவை முடக்கும் செயலில் ஈடுபட மாட்டார்கள். ரீட்டா மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும்.
வருண் காந்தியைப் போல ரீட்டாவும் ஜாமீனில் வெளியே வரலாம். ஆனால் அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
பகுஜன் சமாஜ் கட்சியினரை பலவீனமானவர்கள் என்று காங்கிரஸ் கட்சி நினைத்து விடக் கூடாது. நான் மட்டும் புதன்கிழமை இரவு பகுஜன் சமாஜ் கட்சியினரை தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் ஒரு காங்கிரஸ் தொண்டர் கூட வெளியில் நடமாடியிருக்க முடியாது.
எனது கட்சியினர் யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார் மாயாவதி.
ரீட்டா பேசியது என்ன?..
முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்.பியுமான அசாருதீனின் மொராதாபாத் தொகுதியில் ரீட்டா பகுகுணா ஆவேசமாக பேசியது இன்று காங்கிரஸ் கட்சியை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி என்னதான் பேசினார் ரீட்டா...?
மொராதாபாத்தில் நடந்த மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ரீட்டா, கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு உ.பி. அரசு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்கியதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கற்பழிப்புக்குள்ளான ஒரு பெண்ணின் மன வலி, உடல் ரீதியான சித்திரவதைக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமானதென்று மாயாவதி நினைத்தால், நான் மாயாவதிக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று மகா கேவலமாகப் பேசினார் ரீட்டா.
ரீட்டாவுக்காக போராட்டம்-அஸார் கைது:
இந் நிலையில் ரீட்டா பகுகுணா ஜோஷியின் வீட்டை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி. அஸாருதீன் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் பேரணி நடத்தி கைதாகினர்.
தனது தொகுதியான மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியினரைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார் அஸாருதீன். ரீட்டாவின் கைதையும், அவரது வீட்டை எரித்த செயலையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்ட பின்னர் அஸாருதீன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகக் கிளம்பிநார். இதையடுத்து போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications