மதுரையில் போஸ்டர் ஒட்ட, பேனர் வைக்க தடை
மதுரை: மதுரையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்ட, விளம்பர போர்டுகள் வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் போஸ்டர்கள் ஒட்ட, விளம்பர போர்டுகள் வைக்க சென்னை மாநகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடை விதித்தது.
இது போன்ற சட்டத்தை மதுரையிலும் அமல்படுத்த வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை, மாசி, ஆவணி மூல வீதிகள், வெளி வீதிகள், அழகர் கோவில் ரோடு, பஸ் ஸ்டாண்டுகள், நிழற்குடைகள், பாலங்கள், காமராஜர் சாலை, தமுக்கம் மைதானம், காந்தி மியூசியம் ரோடு, கே.கே.நகர் 80 அடி ரோடு, அண்ணாநகர் 100 அடி ரோடு பனகல் சாலை, போக்குவரத்து திட்டுகள், மாநகராட்சி அலுவலகங்கள், நீரேற்று நிலையங்கள், மருத்துவமனைகள், மின் கம்பங்கள், பள்ளி, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களின் கட்டடங்கள் ஆகிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டவும் மற்றும் விளம்பர போர்டுகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறுவோருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் .
இந்த சட்டம் ஆகஸ்ட் முதல் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. இதனையடுத்து, மதுரை மாநகரின் அழகுக்கு பெரிதும் தடையாக இருந்த போஸ்டர் கலாச்சாரம்
முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 'நடமாடும் இலக்கியமே, நாடாளும் இலக்கணமே' என்று எதை எடுத்தாலும் போஸ்டர் ஒட்டிக் கொண்டாடும் சில மதுரைவாசிகள் இந்தத் தடையை எப்படி சமாளிக்கப் போகிறார்களோ...
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications