லெஸ்பியன் உறவுக்காக தாய்-அண்ணனை கொன்ற சகோதரிகள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: லெஸ்பியன் உறவு வைத்திருந்ததைக் கண்டித்த தாயையும் சகோதரையும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு உடல்களுக்கு தீ வைத்து எரித்த இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் சுபான்கர்பூர் மொஹல்லா என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

மதுகுமாரி (20), மாலா குமாரி (18) இரு சகோதரிகளும் பல ஆண்டுகளாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை விதவையான அவர்களது தாயார் சுமித்திரா தேவி (48), அண்ணன் முகேஷ் குமார் (28) கண்டித்துள்ளனர்.

இதனால் எரிச்சலான இருவரும் கடந்த 9ம் தேதி இரவு தாய்க்கும் சகோதரருக்கும் உணவில் விஷம் கலந்து தந்துள்ளனர். இருவரும் மயங்கி விழுந்து இறந்துவிடவே அவர்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி உடல்கலுக்குத் தீ வைத்துவிட்டு வீட்டை வெளியில் இருந்து பூட்டிக் கொண்டு சென்றுவிட்டனர்.

மறுநாள் காலை போலீசாரிடம் சென்று தங்கள் வீட்டுக்குள் தாயும் சகோதரும் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாகக் கூறினர். இதையடுத்து உடல்களில் பிரேதப் பரிசோதனை நடத்தியபோது அவர்கள் உடலில் விஷம் இருப்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்தபோது ஏன் நீங்கள் இருவரும் வீட்டில் இல்லை என்ற கேள்விக்கும், இரவில் எங்கு போனீர்கள் என்ற போலீசாரின் கேள்விக்கும் சகோதரிகளிடமிருந்து உரிய பதில் வரவில்லை. இதனால் இவர்கள் மீது சந்தேகம் கொண்ட போலீசார் தீவிரமாக விசாரிக்கவே, தங்களது ஓரினச் சேர்க்கைக்கு தாயும் அண்ணனும் தடையாக இருந்ததால் அவர்களைக் கொன்றதாக ஒப்புக் கொண்டுவிட்டனர்.

பிஎஸ்சி படித்து வரும் மதுகுமாரி கூறுகையி்ல், மாலாவை நான் பிரிந்து இருக்கவே முடியாது. திருமணம் செய்தால் கூட ஒரே நபரைத் தான் மணம் முடிக்க திட்டமிட்டிருந்தோம். இதனால் எங்கள் உறவை சி்க்கல் இல்லாமல் தொடர முடியும் என நினைத்திருந்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

பலியான முகேஷ் பிகார் நலத்துறையில் பணியாற்றி வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+