புதுச்சேரி காங்கிஸ் நிர்வாகிகள் 6 பேர் தற்காலிக நீக்கம் !
புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் 6 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வி. நாராயணசாமி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து பா.ம.க சார்பில் பேராசிரியர் எம்.ராமதாஸ் போட்டியிட்டார். தேர்தலில் தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நாராயணசாமி, முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ரங்கசாமி அதை ஏற்று கொள்ளவில்லை. மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் புறக்கணித்தார்.
அதே போன்று அவரது ஆதரவாளர்களும் பாமக வேட்பாளர் ராமதாசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகின்றது .
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு விளக்கம் கேட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை ரங்கசாமியும், அவரது ஆதவாளர்களும் மறுத்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி தேங்காய்திட்டு கவுன்சிலர் எஸ்.பாஸ்கரன், விநாயகமூர்த்தி, சாந்தகுமார், கோவிந்தராஜன், ஷாஜகான், சுரேஷ் ஆகியாரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications