இடைத் தேர்தலில் போட்டியிட திமுகவினரிடையே பெரும் ஆர்வம்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட திமுகவினர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்படுகிறது. 22ம் தேதி இவர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது.
பர்கூர், கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.
இதில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இன்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் தர திமுகவினர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்படுகிறது.
கம்பம் தொகுதியில் போட்டியிட கம்பம் ராமகிருஷ்ணன், இளையாங்குடிக்கு மண்டல தலைவர் க. தனசேகரன் மனு கொடுத்தனர்.
முதல் நாளான இன்று 12 மணிக்குள் 11 மனுக்கள் குவிந்தது. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட நாளை மனு கொடுக்கப் போவதாக மு. கண்ணப்பன் கூறினார்.
நாளை மாலை 6 மணி வரை விருப்ப மனு கொடுக்கலாம்.
விருப்ப மனுக்களைக் கொடுத்தவர்களிடம் 22-ம் தேதி நேர்காணல் நடைபெறும்.
தொண்டாமுத்தூரில் கண்ணப்பன், கம்பத்தில் ராமகிருஷ்ணன் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications