தென்னை மரத்தில் பதுக்கிய வெடிகுண்டுகள் பறிமுதல்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தென்னை மரத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்த போலீசார் அவைகளை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ளது பாலையூர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (58). இவரது வயலில் பண்ணை ஆளாக வேலை பார்த்து வருபவர் வசந்தகுமார் (35).
வசந்தகுமாரை அழைத்த சின்னசாமி, தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்குமாறு கூறினார்.
அப்போது, வசந்தகுமார் மரத்தில் ஏறிய போது, தென்னை மரத்தில் ஒரு தோல் பை இருந்தது.அதை பிரித்து பார்த்த போது அதில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இது குறித்து சின்னசாமி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து வி.களத்தூர் போலீசார், மோப்ப நாயுடன் சம்பவ இட்த்திற்கு விரைந்தனர்.அங்கு தென்னை மரத்தில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் எஸ்.பி. வனிதா, ஏ.டி.எஸ்.பி. ராமையன் ஆகியோர் முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் நாட்டு வெடிகுண்டை வெடிக்காமல் செயலிழக்கச் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications