ஓட்டு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம்-பாஜக
சென்னை: மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் அது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்ட வேண்டும் என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் உள்ள முகாம்களில் 2.8 லட்சம் தமிழர்கள் அடைபட்டுள்ளனர். இவர்களில் 50,000 பேர் குழந்தைகள். அந்த முகாம்கள் எப்படி இருக்கின்றன என்று உலக அளவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் அதிர்ச்சியான செய்திகளில் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
அவர்களுக்கு போதிய மருத்துவர்கள், மருந்துகள் இல்லை. குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. முகாம்களில் சுகாதாரம் இல்லை.
விடுதலைப் புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் அப்பாவி தமிழ் மக்களை பற்றி கவலையடைகிறோம். அந்த மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இணையாக அனைத்து வகை சுதந்திரமும், கல்வி மற்றும் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
3வது அணி ஒரு வேகத்தடை போன்றது. அவர்களால் எதுவுமே செய்ய முடியாது.
தேர்தலில் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதை பல நிபுணர்கள் செய்முறை விளக்கத்தோடு நிரூபித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் ஹைதராபாத்தில் ஒரு பூத்தில் உள்ள மின்னணு ஓட்டு எந்திரத்தில் யார் ஓட்டு போட்டாலும் அதில் எங்கள் தாமரை சின்னத்தில் மட்டுமே ஓட்டு பதிவானது. இதைத் தொடர்ந்து அங்கு மறுநாள் மீண்டும் ஓட்டுப்பதிவு நடந்தது.
எனவே மீண்டும் வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். அதே நேரத்தில் மின்னணு ஓட்டு எந்திரத்திலும் வாக்களிக்க வேண்டும். அதாவது இரண்டிலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓட்டு எண்ணும்போது சந்தேகம் வரும்போது வாக்குசீட்டை பார்க்கலாம்.
எனவே மின்னணு ஓட்டு எந்திர குறைபாடுகள் குறித்து விளக்கம் அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளி்ன் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்ட வேண்டும் என்றார் நாயுடு.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications