சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து: 7 பேர் பலி
சிவகாசி: சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 7 பேர் பலியாயினர். 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சிவகாசி நமஸ்கரிச்சான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ வெடிகள், வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குப் பரவியதி்ல் அவை வெடித்துச் சிதறின.
இதில் 7 தொழிலாளர்கள் பலியாயினர். 50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீபாவளி நெருங்குவதையொட்டி இங்கு பட்டாசுத் தயாரிப்பு இரவு, பகலாக நடந்து வந்தது. 250 பேர் வரை பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
விபத்து ஏற்பட்டு பல மணி நேரம் ஆகியும் பகல் வரை தீ எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு படையினர் படுகாயமடைந்த 20 பேரை ஆலையிலிருந்து மீட்டுள்ள நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications