இலங்கை கெடுபிடி-அலுவலகங்களை மூடிய ரெட்கிராஸ்
கொழும்பு: இலங்கை அரசின் கெடுபிடி காரணமாக தனது நான்கு அலுவலகங்களை மூடி விட்டது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தங்களது பணிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து செஞ்சிலுவைச் சங்கம் தனது நான்கு அலுவலகங்களை மூடி விட்டது. இந்த நான்கும் கிழக்கு மாகாணத்தில் இருந்து வந்தன.
இதுகுறித்து செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதாபிமான தேவைகள் இருப்பின் அவற்றைப் பூர்த்தி செய்யும் பணியில் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அக்கரைப்பட்டு, மட்டக்களப்பு, முத்தூர், திரிகோணமலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த எங்களது அலுவலகங்களை மூடியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் செய்து வந்த அயராத பணிகளால் எரிச்சல் அடைந்த இலங்கை அரசு, போர் முடிந்து விட்டதால் உங்களது பணிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என கடந்த மாதம் உத்தரவிட்டது.
உயிரிழந்த அப்பாவித் தமிழர்கள் குறித்தும், பாதிக்கப்பட்டோருக்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் குறித்தும் வெளிப்படையாக செஞ்சிலுவைச் சங்கம் பேசி வந்ததை இலங்கை அரசு விரும்பவில்லை.
மேலும், இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று சேவை செய்ய செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து அனுமதி கோரி வந்தது. ஆனால் அதை இலங்கை அரசு ஏற்கவில்லை. இது தொடர்பாகவும் இரு தரப்புக்கும் இடையிலான உறவு கசந்தது.
3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை திறந்த வெளி சிறைச்சாலையைப் போன்ற முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு முழுமையான அளவில் சேவையாற்ற யாரையும் அனுமதிக்காத இலங்கை அரசு தற்போது சேவை நிறுவனங்களின் சேவையைக் குறைத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications