மாணவியை படம் எடுத்து மிரட்டிய வாலிபர்
சென்னை: சட்டக் கல்லூரி மாணவி தன்னுடன் நெருக்கமாக பேசியதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி மிரட்டிய நபரை, மாணவியின் சக நண்பர்கள் சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ராம். கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் ஒன்றில் பணியாற்றும் இவர், சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மும்தாஜ் என்ற மாணவியைக் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் மும்தாஜைப் பார்க்க கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது ராமை, மும்தாஜுடன் படிக்கும் மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராமும், மும்தாஜும் அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் வந்துள்ளனர். அப்போது அவற்றை செல்போனில் படம் பிடித்துக் கொள்வாராம் ராம்.
இந்த நிலையில் ராமின் போக்குப் பிடிக்காத மும்தாஜ், இனிமேல் பழக வேண்டாம், பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார். மேலும் பேசுவதையும் நிறுத்தி விட்டார்.
இதனால் கோபமடைந்த ராம், நேற்று சட்டக் கல்லூரிக்கு வந்து மும்தாஜை சந்தித்து என்னுடன் பேசாவிட்டால் செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று மிரட்டினாராம்.
இதைப் பார்த்து அருகில் இருந்த மும்தாஜின் நண்பர்கள் கோபமடைந்து ராமை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தி்ல ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரும் புகார் கொடுக்க விரும்பாததால், இதை சுமூகமாக தீர்த்து வைத்து அனுப்பி விட்டனர் போலீஸார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications