சட்டசபை இடைத் தேர்தல் - நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இளையாங்குடி, பர்கூர், கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்தல் அறிவிப்பு நாளை முறைப்படி வெளியிடப்படுகிறது. நாளையே வேட்பு மனுத் தாக்கலும் தொடங்குகிறது.
ஜூலை 29ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை 30ம் தேதி நடைபெறும்.
மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள கடைசி நாள் ஆகஸ்ட் 1ம் தேதியாகும்.
ஆகஸ்ட் 18ம் தேதி வாக்குப் பதிவும், ஆகஸ்ட் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
புது மின்னணு வாக்கு இயந்திரங்கள்!:
இதற்கிடையே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகள் செய்வதாக ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குறை கூறுவதால் அதைத் தவிர்க்க புதிய வாக்குப் பதிவு இயந்திரங்களை தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் பயன்படுத்தவுள்ளதாக தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெருமளவில் செய்யப்பட்டதால்தான் தங்களுக்கு பெரும் தோல்வி கிடைத்ததாக அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறின.
அதில் பாமக ஒரு படி மேலே போய், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்பதை ஒரு இயந்திரத்தைக் கொண்டு டெமோ செய்தும் காட்டியது. இயந்திரங்களுக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அது வழக்கும் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், இப்படிப்பட்ட மோசடிகள் நடைபெறும் என்பதாலும், பண பலம் பயன்படுத்தப்படும் என்பதாலும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக, மதிமுக, பாமக ஆகியவை கூறியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான புகார்களைத் தவிர்க்க புதிய முடிவுக்கு வந்துள்ளது தேர்தல் ஆணையம்.
அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வருகிற இடைத் தேர்தலில் பயன்படுத்தாமல், புதிய இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இதற்காக புதிதாக 3000க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாம். இவற்றைத்தான் இடைத் தேர்தலில் பயன்படுத்தப் போகிறார்களாம். விரைவில் இவை வந்து சேரும் என்றும் தேர்தல் ஆணையத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தி இயந்திரங்கள் வழக்கமானவை தானா அல்லது அதில் பாதுகாப்பு மாற்றங்கள் ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்து தெரியவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications