எம்எல்ஏ காரை தடுத்த போலீஸ்காரருக்கு அடி-உதை!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரு வழிப்பாதையில் செல்ல முயன்ற திமுக எம்.எல்.ஏ.வின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்சாருக்கு அடி உதை விழுந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் துரை சந்திரசேகரன்.
இவர் நேற்று திருவையாறில் இருந்து தஞ்சாவூர் நோக்கி குவாலிஸ் காரில், தன் ஆதரவாளர்களுடன் சென்றார்.
தஞ்சை அரண்மனை பகுதியிலிருந்து கீழராஜ வீதி வழியாக, பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும் பாதை ஒரு வழிப்பாதை வழியாக எம்எல்ஏவின் கார் செல்ல முயன்றது.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மதி, காரை தடுத்து நிறுத்தினார்.
எம்எல்ஏவின் கார் எண்ணை அவர் குறிப்பெடுக்க முயன்றபோது, துரை சந்திரசேகரனும், அவருடன் வந்தவர்களும், காரை
நிறுத்தி அந்த போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்தனர். மேலும் செறுப்பால் அடிக்க முயன்றுள்ளனர்.
இதையடுத்து, காரில் வந்த அடையாளம் தெரிந்த, பெயர்
தெரியாத நால்வர் தன்னை செருப்பால் அடிக்க முயன்றவதாக காவலர் மதி தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தார்.
எம்எல்ஏவின் கார் என்று தெரிந்தம் அந்த காரை நிறுத்தி, ஒரு வழிப்பாதையில் செல்லவிடாமல் தடுத்த போலீஸ்காரர் மதிக்கு, எஸ்பி செந்தில்வேலன் ரொக்கப் பரிசு கொடுத்து கெளரவித்தார்.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications