185 பயணிகளுடன் அமேசான் ஆற்றில் மூழ்கிய கப்பல்
Subscribe to Oneindia Tamil
ரியோ டி ஜெனீரோ: 185 பேருடன் சென்ற கப்பல், பிரேசினின் அமேசான் ஆற்றில் இன்று காலை மூழ்கியது. மனாஸ் என்ற நகருக்கு அருகே இந்த சம்பவம் நடந்தது.
மனாஸ் துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்பிய சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து பல பயணிகளைக் காப்பாற்றினர். இருப்பினும் இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
இந்தக் கப்பல் பாரா மாகாணத்தில் உள்ள சாந்தேரம் என்ற இடத்திற்குப் போய்க் கொண்டிருந்தது.
நீச்சல் வீரர்கள் பலர் ஆற்றில் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலர் கப்பலுக்குள்ளேயே சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications