காந்தி சிலை வாயில் நோட்டு-அதிமுக கவுன்சிலர் கைது!
திண்டிவனம்: திண்டிவனத்தி்ல் காந்தி சிலையை அவமரியைதை செய்த விவகாரத்தில் அதிமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை திண்டிவனம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலையின் கண்களி்ல் கறுப்பு-சிவப்பு துணி கட்டப்பட்டு, சிலையி்ன் வாயில் 10 ரூபாய் நோட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதன் அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனரில் காங்கிரஸ் தலைவர் சோனியா நோட்டுக் குவியலில் அமர்ந்திருப்பது போலவும் முதல்வர் கருணாநிதி மற்றும் பலர் வரிசையில் சென்று அந்தப் பணத்தைப் பெறுவது போலவும் படம் ஒட்டப்பட்டிருந்தது.
மேலும் அதன் அருகே அருகே ''ஜனநாயக நாட்டில் பணநாயகத் தேர்தல். காந்தி போட்ட நோட்டுக்கு வரப் போகிறது தேர்தல். புறக்கணிப்போம்.. புறக்கணிப்போம்'' என்றும் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது இந்தச் செயலைச் செய்தது திண்டிவனம் நகர்மன்றத்தின் 5வது வார்டு கவுன்சிலர் சேகர் என்று தெரியவந்தது. இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார்.
இதையடுத்து இன்று காலை சேகர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் செயலில் இவருக்கு துணையாக இருந்த மேலும் சில அதிமுகவினரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications