ஹூண்டாய் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
சென்னை: ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள உயர்வு பிரச்சினையில் ஏற்பட்ட உடன்பாட்டில் திருப்தி ஏற்படாததால் இந்த உள்ளிருப்புப் போரில் இறங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா தொழிலாளர் யூனியன் சார்பில் நேற்று இரவிலிருந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.
தங்கள் யூனியனை அங்கீகரிக்காதது மற்றும் 80 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்தது போன்றவற்றைக் கண்டித்து ஏற்கெனவே இந்த யூனியன் 17 நாட்கள் போராட்டம் நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தைக் கைவிட்ட இந்த யூனியன், இப்போது மீண்டும் ஊதிய உயர்வு குறித்த அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் இந்தப் புதிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
ஆனால் இந்தப் போராட்டத்தைக் கண்டுகொள்ளப் போவதில்லை என ஹூண்டாய் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
