ஏடிஎம் மையத்தில் சிக்கித் தவித்த நால்வர்
சென்னை: சென்னை அருகே தாம்பரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் சிக்கிக் கொண்ட நான்கு பேரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இங்கு இன்று அதிகாலையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி கார்த்திகேயன், மேடவாக்கத்தை சேர்ந்த மின் வாரிய அதிகாரி ஜான்சன் ஆகிய இருவரும் பணம் எடுக்க சென்றனர்.
பணம் எடுத்ததும் அவர்கள் வெளியே வருவதற்கு கதவை திறந்தனர். ஆனால் கதவு திறக்காமல் சிக்கிக் கொண்டது. அவர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் 1 மணி நேரம் அவர்கள் இருவரும் ஏ.டி.எம். மையத்தில் உள்ளேயே தவித்தனர்.
பின்னர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து கண்ணாடிக் கதவைக் கழற்றி இருவரையும் மீட்டனர்.
இந்த நிலையில் காலை எட்டரை மணியளவில் அதே ஏடிஎம் மையத்திற்கு அசோக் குமார், அஸ்வின் ஆகிய இரு மாணவர்கள் வந்தனர். அவர்களும் பணத்தை எடுத்து விட்டு திரும்புகையில் கதவு திறக்காமல் சிக்கிக் கொண்டனர்.
மறுபடியும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். கதவில் பிரச்சினை இருப்பதால் கதவை மூட வேண்டாம் என மையப் பாதுகாவலர் அறிவுறுத்தப்பட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications