திமுக, காங் வேட்பாளர்கள் 29ம் தேதி வேட்பு மனு தாக்கல்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் 29ம் தேதி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. 29ம் தேதியுடன் மனு தாக்கல் முடிகிறது.
இத்தேர்தலில் திமுக சார்பில் கம்பத்தில் ராமகிருஷ்ணன், இளையாங்குடியில் சுப.மதியரசன், பர்கூரில் கே.ஆர்.கே.நரசிம்மன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் தனது வேட்பாளர்களை நாளை அறிவிக்கவுள்ளது. இதையடுத்து ஐந்து வேட்பாளர்களும் ஒரே நாளில், 29ம் தேதியன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
பர்கூர் தி.மு.க. வேட்பாளர் நரசிம்மன் 29-ந் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் பர்கூரில் இருந்து ஊர்வலமாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்கிறார். அங்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், தேர்தல் அதிகாரியுமான சண்முக சுந்தரத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள் இந்த இடைத் தேர்தலை தனியாக சந்திக்கின்றனர். ஸ்ரீவைகுண்டம், பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தொண்டாமுத்தூர், கம்பத்தில் மார்க்சிஸ்ட்டும் போட்டியிடுகின்றன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக தனலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். பர்கூர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார்.
சிபிஎம் தான் போட்டியிடும் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் நேற்று மாலை அறிவித்தது.
அதேபோல ஐந்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தேமுதிகவும் அறிவித்துள்ளது.
பாஜக
பாஜக இன்னும் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இக்கட்சி ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications