25 ஆண்டுக்குப் பின் கொச்சி-கொழும்பு கப்பல்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கவுள்ளது.
இதுதொடர்பான முடிவு கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற சார்க் அமைப்பின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், இந்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தலைமையிலான தூதுக் குழு கலந்து கொண்டது. இந்தக் குழு, இலங்கை போக்குவரத்து அமைச்சர் அழகப்பெருமாவுடன் பேசியது.
அதன் பின்னர் அழகப்பெருமா செய்தியாளர்களிடம் பேசுகையில், கொள்கை அளவில் கொச்சி- கொழும்பு கப்பல் சேவைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும்.
இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு. கடந்த ஆண்டு நடந்த சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டின்போது இதுகுறித்து பேசப்பட்டது.
அப்போது இலங்கை அரசு விடுத்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு இசைவு தெரிவித்துள்ளது இந்தியா என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து 1985ம் ஆண்டுடன் நின்று போனது. அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த சண்டையால் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது இயலாமல் போனது.
இந்த நிலையில், கொழும்பு - தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டது. ஆனால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த யோசனை கைவிடப்பட்டது. தற்போது கொச்சியிலிருந்து கொழும்புக்கு கப்பல் விடப் போகிறார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications