சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி
சிவகாசி: சிவகாசியில் இன்று மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்துள்ளது. இதில் 3 பேர் பலியானார்கள்.
கடந்த சில நாட்களில் சிவகாசியில் நடந்துள்ள 3வது பட்டாசு விபத்து இது என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் நமஸ்கரிச்சான்பட்டி என்ற இடத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
அது நடந்த அடுத்த சில தினங்களில் ஊருக்கு ஒதுக்குப் புறகமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த ஒருவர் வெடிவிபத்தில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், இன்று பள்ளப்பட்டி சாலையில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலையில் இருந்த 3 கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டன.
ராஜு, நல்லையன், கண்ணன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.
இடிபாடுகளுக்குள் நிறையப் பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே உயிர்ப்பலி அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications