காஷ்மீர் செக்ஸ் விவகாரம்-நடந்தது என்ன?
ஸ்ரீநகர்: 2002ம் ஆண்டு காங்கிரஸ்-முப்தி முகம்மத் சயீதின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன.
முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருந்தார் முப்தி முகம்மத் சயீத். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத் முதல்வராக இருந்தார்.
இந் நிலையில் 2006ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஸ்ரீநகர் சிறுமியின் ஆபாச சிடிக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அந்தச் சிறுமியுடன் சில அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகள் செக்ஸில் ஈடுபட்ட இரு ஆபாச சிடிக்கள் உலா வந்தன. செல்போன் கேமராவின் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோக்கள் குறித்து பத்திரிக்கைகளில் செய்தி வந்தையடுத்து போலீசார் அந்த சிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது சபினா என்ற பெண் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது அந்த வீடியோவில் இருப்பது 8ம் வகுப்பு மாணவி என்றும் அவருக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து செலுத்தி கற்பழிக்கப்பட்டு பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்கியது தெரியவந்தது.
இந்தச் சிறுமியைத் தவிர மேலும் பல சிறுமிகள், இளம் பெண்களை சில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு சப்ளை' செய்ததாகவும் சபினா தெரிவித்தார்.
இதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர்களாக இருந்த ஜி.எம்.மிர், ராமன் மட்டூ, எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி, 10 போலீஸ் உயர் அதிகாரிகள், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, சில தொழிலபதிபர்களுக்கு தொடர்புள்ளதை சபினா தெரிவித்தார்.
மேலும் கிட்டத்தட்ட 50 பெண்களை சபினாவும் அவரது கும்பலும் வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காஷ்மீர் பெரும் கொந்தளி்ப்பு ஏற்பட்டது. ஸ்ரீநகரில் சபினாவின் வீடுகளை மக்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த செக்ஸ் விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் மாநில அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் மாநில போலீசார் நியாயமான விசாரணை நடத்த மாட்டார்கள் என்றும், இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
நிலைமை சிக்கலானதால், அப்போதைய முதல்வர் குலாம்நபி ஆசாத் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications