விருத்தாசலம்-ரூ.5 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரூ.5 லட்சம் கேட்டு ஏழு வயது பள்ளி மாணவன் கடத்தப்பட்டுள்ளான்.
விருத்தாசலத்தை அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (30), இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர்.
சுரேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளிக்கு வேனில் செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் சுரேஷ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு, மாலையில் வழக்கமாக இறங்கும் இடத்தில் வேனில் இருந்து சுரேஷ் உள்பட 4 மாணவர்கள் இறங்கினர்.
தனது வீடு நடந்து கொண்டிருந்த சுரேஷை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுரேசை கடத்தி சென்றதாகத் தெரிகிறது. மகன் வீடு திரும்பாததால் கம்மாபுரம் போலீசில் புகார் கொடுத்தார் மகேஸ்வரி.
இந் நிலையில் நேற்று காலை மகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட ஒருவன், சுரேஷை விடுவிக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தர வேண்டும். போலீசுக்குப் போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டியுள்ளான்.
இந்தக் கும்பலைப் பிடித்து சிறுவனை மீட்க உயர் போலீஸ் அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications