பெண் ஊழியரை கட்டிப்பிடித்து 'இச்'.. ஏட்டு கைது
தஞ்சாவூர்: ரயில்வே பெண் ஊழியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதளூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ஜெகதீசன் (53). இவர் நேற்று இரவு பூதளூர் ரயில்வே ஸ்டேஷனில் பணியில் இருந்தார்.
அப்போது, அவர் ரயில்வே ஊழியர் சந்தனமேரி (40) யை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து தகாத முறையில் நடந்து கொண்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தனமேரி கூச்சல் போடவே ஏட்டு ஜெகதீசனை சக ரயில்வே போலீசார் சுற்றி வளைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தார்.
கணவரைக் குத்திய மனைவி கைது
இதற்கிடையே, கும்பகோணத்தில் கணவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் உள்ளிக்கான்சந்து நாடார் காலனியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் முருகன்(36). இவரது மனைவி கங்கா (30).
கங்கா தனது கணவருக்கு தெரியாமல் தனது அண்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முருகன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கங்கா கத்தியால் கணவரின் இடது விலாவில் குத்தினார். மேலும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
மனைவியிடம் குத்துப்பட்டு படுகாயமடைந்த முருகன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார்.
பின்பு, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து கங்காவை கைது செய்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications