தபால்துறையின் விமான சேவை சென்னைக்கும் நீட்டிப்பு
சென்னை: வட கிழக்கு பிராந்தியத்தில் கிடைத்துள்ள வெற்றியைத் தொடர்ந்து தபால் துறையின், விமான தபால் சேவை சென்னை, பெங்களூர், மும்பை, நாக்பூர், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், மேற்கு, தெற்கு, கிழக்குப் பிராந்தியங்களில் உள்ளடங்கியுள்ள இந்த நகரங்களுக்கு தலா ஒரு தபால் விமானம் இயக்கப்படும்.
மும்பை -நாக்பூர் - மும்பை, பெங்களூர் -சென்னை - நாக்பூர் - சென்னை - பெங்களூர், கொல்கத்தா - டெல்லி நாக்பூர் - டெல்லி - கொல்கத்தா ஆகிய மூன்று மார்க்கங்களில் தபால்துறையின் விமானங்கள் இயக்கப்படும்.
இதில் நாக்பூர் ஹப் மையமாக செயல்படும். மற்ற நகரங்களுக்கான விமான சேவையை இது கையாளும்.
சென்னையில் செயல்படும் ஹப் பிரிவு, தானியங்கி முறையில் தபால்களை பிரித்து எடுத்து அனுப்பும். மீனம்பாக்கம் பழைய விமான நிலைய வளாகத்தில் இதன் அலுவலகம் அமைக்கப்படுகிறது.
சென்னை அண்ணா சாலை வர்த்தக தபால் மையம், சென்னை பதிவு கண்காணிப்பு மையம், சென்னை பொது தலைமை தபால் நிலையம், ஸ்பீட் போஸ்ட் கண்காணிப்பு மையம் ஆகியவை தபால்களைப் பெற்று மீனம்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கும்.
அங்கிருந்து சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு விமானம் மூலம் தபால்கள் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் தபால்கள் அனைத்தும் மதுரை, திருச்சி, கோவையில் பெறப்பட்டு அங்கிருந்து சென்னை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
சென்னையிலிருந்து தினசரி முற்பகல் 11.30 மணிக்கு நாக்பூர் வழியாக அனைத்து இடங்களுக்கும் தபால்கள் விமானம் மூலம் சேர்க்கப்படும்.
அதேபோல நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் தபால்கள் தினசரி மாலை 4 மணிக்கு சென்னை வந்து சேரும். அங்கிருந்து பிற ஊர்களுக்கு மதுரை, திருச்சி, கோவை வழியாக அனுப்பி வைக்கப்படும்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications