மனைவியை கொல்ல போலீசிடமிருந்து தப்பிய கைதி
சென்னை: தனக்கு சிறை தண்டனை வாங்கித் தந்த மனைவியைக் கொலை செய்ய போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கைதி கைது செய்யப்பட்டார்.
கோவை மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமாருக்கும் (40) இவரது மனைவி லலிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்தனர்.
இருவரும் விவாகரத்து கோரி வழக்கும் போட்டனர்.
இந் நிலையில் நந்தகுமார் மனைவி லலிதாவை தாக்கி கொலை செய்ய முயன்றார். லலிதா அவரிடம் இருந்து தப்பிச் சென்று போலீசில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து நந்தகுமாரை போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 9ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. நந்தகுமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைக்கக் கொண்டு சென்றபோது தப்பினார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நந்தகுமார் தனது மனைவியை கொலை செய்ய தேடி அலைந்தார்.
இது தெரிந்ததும் லலிதா சென்னை வண்ணாரப் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். அவரைக் கொலை செய்ய நந்தகுமாரும் சென்னை வந்து பெரியமேடு பகுதியில் ஒரு லாட்ஜி்ல் தங்கினார்.
இதை அறிந்த லலிதா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தார். இதையடுத்து பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜுகளில் போலீசார் சோதனை நடத்தி நந்தகுமாரை பிடித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications