எம்ஆர்எப் தொழிலாளர்கள் மீது தடியடி; 60 பேர் கைது!
சென்னை: சென்னையில் எம்.ஆர்.எஃப். தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அதன் தொழிலாளர்களை தடியால் அடித்து விரட்டினர் போலீசார். இவர்களில் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணத்தில் உள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கினர். ஆனால் அதனை எம்ஆர்எப் நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை.
எனவே தங்கள் தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்பே போராட்டங்களை ஆரம்பித்தனர் தொழிலாளர்கள்.
அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணியாகச் சென்றனர். பேரணியில் பங்கேற்காத ஒரு பிரிவினர் மட்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்தனர். உடனடியாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
தொழிலாளர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். அவர்களில் 60 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
டன்லப் அடுத்த மாதம் திறப்பு!
மூடப்பட்டுள்ள அம்பத்தூர் டன்லப் டயர் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுகிறது. அடுத்தமாதம் முதல் இந்தத் தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும் என தமிழக அரசின் தொழிலாளர் ஆணாயர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக மூடப்ப்டிருந்தது. பின்னர் ரூயா குழுமம் இந்த நிறுவனத்தை வாங்கி நடத்த ஆரம்பித்தது. ஆனால் மீண்டும் பிரச்சினை எழவே மூடப்பட்டது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முயற்சியால், டன்லப் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை 2 மாதங்களாக நடைபெற்று வந்தது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் முன்னாள் எம்.பி. ஏ. கிருஷ்ணசாமி மற்றும் டன்லப் செயல் இயக்குநர் தாமோதர் பிரசாத் தானி முன்னிலையில் நேற்று சென்னையில் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதிய ஒப்பந்தத்தின்படி, 31.8.2009-க்குள் மீண்டும் ஆலை திறக்கப்படும். தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப்படும். ஆலை திறக்கப்படுவதை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்படுவதால் இதுநாள் வரை வேலையின்றி இருந்த சுமார் 700 தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
ஆலை திறந்தவுடன் உடனடியாக 40 டன் உற்பத்தியை தொடங்கும். படிப்படியாக ஆறு மாத காலத்துக்குள் ஆலையின் முழு உற்பத்தி திறனான 138 டன்னை எட்டக்கூடும். அப்போது கூடுதலாக 400 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications