ஒரிசாவில் ஐஏஎஸ் அதிகாரி - குடும்பத்தினர் நால்வர் சுட்டுத் தற்கொலை
பர்கார் (ஒரிசா): ஒரிசா மாநிலத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
சுடப்பட்டதால் படுகாயமடைந்த ஐஏஎஸ் அதிகாரியின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிர் ஊசலாடி வருகிறது.
ஒரிசா மாநிலத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெகதானந்த பான்டா (50). இவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, தற்போது மத்திய அரசுப் பணியில் உள்ளார்.
இன்று அதிகாலையில், பர்கார் மாவட்டம், தியோகாவன் என்ற இடத்தில் உள்ள பான்டாவின் வீட்டில் பான்டா, மனைவி சுரேகா பான்டா (46), தந்தை மனோசி பான்டா (75), சகோதரிகள் பிஜயலக்ஷ்மி (57), கிஷோரி மிஸ்ரா (54) ஆகியோர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
அவர்களின் உடல்களுக்கு அருகே பான்டாவின் ரிவால்வர் கிடந்தது. வீட்டின் அனைத்துக் கதவுகளும் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது பான்டாவின் தாயார் வீட்டின் முதல் மாடியில் இருந்தார். சத்தம் கேட்டு அவர் ஓடி வந்து பார்த்தபோது அனைவரும் இறந்து கிடந்தனர்.
படுகாயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த பான்டாவின் 22 வயது மகன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உயிர் ஊசலாடி வருகிறது.
இது தற்கொலையைப் போல தோன்றுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் செயலாக தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications