முற்றிலும் கண்ணாடிகளால் ஆன மலேசியாவின் ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில்!
ஆயிரக்கணக்கான கண்ணாடித் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோவில் பார்க்கவே படு பிரமிப்பாக உள்ளது. பளபளப்பாகவும், ஜொலி ஜொலிப்பாகவும் காணப்படும் இந்த வித்தியாசமான கோவில், மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு மாநிலம், ஜலான் தெப்ரு என்ற இடத்தில் உள்ளது.
மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெறுகிறது. இந்துக்களை மட்டும் கவராமல், சிறந்த சுற்றுலாத் தளமாகவும் இது உருவாகும் என நம்பப்படுகிறது.
3 மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவில் இந்த கண்ணாடிக் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கோவில் மலேசியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் வேறு எங்கும் இல்லை என்கிறார் கோவில் தலைவர் எஸ்.சின்னத்தம்பி.
கோவிலின் சுவர்கள், மேற்கூரை, கோபுரங்கள், தூண்கள் உள்ளிட்டவற்றின் 95 சதவீத பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிய, விலை உயர்ந்த வண்ணக் கண்ணாடித் துண்டுகள் இவை. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கண்ணாடித் துண்டுகளை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனராம்.
கண்ணாடிகளைப் பதிக்கும் பணியில் மியான்மரைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஏழு வண்ணக் கண்ணாடிகளிலிருந்து நாமம், ஸ்ரீ சக்ரா, ஸ்வஸ்திகா ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர்.
பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த கண்ணாடிக் கோவில் விரைவில் திறக்கப்படவுள்ளதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications