மாணவி கன்னத்தில் பளார் - தலைமை ஆசிரியை மீது கலெக்டரிடம் புகார்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பள்ளி மாணவி கன்னத்தில் தலைமை ஆசிரியை அடித்தும், தலைமுடியை பிடித்து இழுத்தும் சித்ரவதை செய்வதாக கலெக்டரிடம் மாணவிகள் திரண்டு வந்து கண்ணீர் மல்க கூறினர்.
கடந்த சில நாட்களாகவே நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும், அவர்களை அடித்து உதைப்பதும், ஆபாசமாக திட்டுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் திரண்டு நேற்று மாலை பள்ளி விட்டதும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரின் அறை முன் கூடி நின்றனர். பின்னர் அவர்கள் கூறிய விபரம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
நேற்று வகுப்பறைக்கு பிளஸ்டூ மாணவி மலர்பிரியா கவரிங் செயின் அணிந்து வந்துள்ளார். நகை எல்லாம் பள்ளிக் கூடத்துக்கு அணி்ந்து வரக்கூடாது என்று கூறிய தலைமை ஆசிரியையிடம், அது கவரிங் என மாணவி கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை அந்த செயினை பிடித்து இழுத்து அறுத்து எறிந்து விட்டு மாணவி மலர் பிரியாவின் கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார்.
இதனால் கதறி அழுத மலர் பிரியாவை பார்த்த மற்ற மாணவிகள் கலங்கி நின்றனர். அறைபட்டதால் மாணவியின் ஒரு பக்க கன்னம் வீங்கி விட்டது.
பின்னர் அந்த மாணவியின் கூந்தலை பிடித்து இழுத்து அவரை தரையில் போட்டு அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் நேற்று மாலை வகுப்பு விட்டதும் ஆவேசம் அடைந்த மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications