தலைவர்கள் வருகை-சூடுபிடிக்கும் ஸ்ரீவைகுண்டம் தேர்தல் களம்
நெல்லை: ஸ்ரீவைகுண்டம் இடை தேர்தல் பிரசாரத்திற்காக தலைவர்கள் முற்றுகையிட ஆரம்பித்திருப்பதால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மரணம் அடைந்ததால் அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் காங், கம்யூ, தேமுதிக, பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
காங் வேட்பாளராக சுடலையாண்டி, இ.கம்யூ வேட்பாளராக தனலெட்சுமி, தேமுதிக வேட்பாளராக சவுந்திரபாண்டியன், பாஜக வேட்பாளராக வக்கீல் சந்தனகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.
இடைத் தேர்தல் 18ம் தேதி நடப்பதால் பிரசாரத்திற்கு 15 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் இடைத் தேர்தலில் போட்டியிடும் தங்கங் கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள், நடிகர்கள் பிரசாரத்தை தொடங்குகின்றனர்.
மு.க.அழகிரி நாளை பிரசாரம்..
மத்திய அமைச்சர் மு.க அழகிரி காங் வேட்பாளரை ஆதரித்து ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
15ம் தேதி நடிகர் குமரிமுத்து காங் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
7, 8ல் விஜயகாந்த் பிரசாரம் ..
தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் 7,8 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆக 12ம் தேதி பிரச்சாரம் செய்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தனலெட்சுமியை ஆதரித்து மாநில செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு, ஆகியோரும், மார்கிஸ்ட் தலைவர்களும் பிரச்சாரம் செய்கின்றனர்.
நடிகர்கள், தலைவர்கள், மத்திய, மாநில அமைச்சர்களின் வருகையால் ஸ்ரீவைகுண்டம் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications