பீகார் ஆற்றில் உடைப்பு - பெரும் வெள்ளம் - லட்சம் மக்கள் தவிப்பு

ஏராளமான வீடுகளை வெள்ள நீர் அடித்துச் சென்று விட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திறந்தவெளியில் பரிதவித்து வருகின்றனர். குடிநீர், உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த இடத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நாராயண் சிங் என்பவர் கூறுகையில், நாங்கள் பசியுடன் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் உணவு, பால் இல்லாமல் அழுது கொண்டிருக்கின்றன. ஆனால் அரசே, வெள்ளண் வந்து 24 மணி நேரமாகியும் கூட இதுவரை எங்களை மீட்கவோ, உணவு, பால் உள்ளிட்டவற்றைத் தரவோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றார்.
இதுவரை ஆற்று வெள்ளத்திற்கு 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியுள்ளன. மேலும் பல கிராமங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து வருகிறது.
நீரில் மூழ்கி இதுவரை 12 பேர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும்தான் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட கரைப் பகுதியை முதல்வர் நிதீஷ் குமார் இன்று பார்வையிடவுள்ளார்.
பாக்மதி ஆற்றில் மொத்தம் 3 கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பீகாரில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள காசி, கந்தாக், புதி, பாக்மதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் இந்த ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் ஆற்றின் கரையோரப் பகுதி மக்களை உரிய முறையில் எச்சரிக்காமல் இருந்ததாலும், கரைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications