சர்ச்சைக்குரிய சிங்கூர் நிலத்தில் ரயில்வே திட்டம் - மமதா விருப்பம்

சிங்கூர் நிலத்தை வைத்துத்தான் மமதாவின் அரசியல் வேகமாக உயர்ந்தது. தனது நானோ கார் தயாரிப்பை சிங்கூரில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அதில் வெடித்த விவசாயிகள் பிரச்சினையை கப்பென்று பிடித்துக் கொண்ட மமதா, டாடா நிறுவனத்திற்கு எதிராக மிகக் கடுமையாக போராடினார். இந்தப் போராட்டங்களால் அவருக்கு சிங்கூர் பகுதியில் மட்டுமல்லாது மேற்கு வங்க மாநிலம் முழுவதும் விவசாயிகள், கிராமப்புற மக்களிடையே பெரும் செல்வாக்கு ஏற்பட்டது.
இதை வைத்து லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் களம் இறங்கிய மமதா இடதுசாரிகளுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்தார்.
இந்த நிலையில் சிங்கூர் இடத்தில், தற்போது ரயில்வே திட்டம் ஒன்றை செயல்படுத்தப் போவதாக மமதா கூறியுள்ளார்.
சிங்கூர் - ஹவுரா புறநகர் ரயில் சேவையை சிங்கூரில் தொடங்கி வைத்தார் மமதா. அப்போது அவர் பேசுகையில், சிங்கூரில் தொழிற்சாலை வர வேண்டும் என விரும்புகிறோம். டாடா நிறுவனத்திற்காக வழங்கப்பட்ட இடத்தை மத்திய அரசுக்கு வழங்கினால், அதை ரயில்வே துறையின் தேசிய திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.
இதை தனியாருடன் இணைந்து மேற்கொள்வோம். இந்த இடத்தில் அந்தத் திட்டத்தைக் கொண்டு வர நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.
டாடா திட்டத்திற்காக விரும்பிக் கொடுக்கப்பட்ட 600 ஏக்கர் நிலப்பரப்புக்குள்தான் ரயில்வே திட்டம் அமையும், விவசாயிகளிடமிருந்து விருப்பத்திற்கு மாறாகப் பறிக்கப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை நாங்கள் அவர்களிடமே கொடுத்து விடுவோம்.
சிங்கூர் பகுதி மக்களுக்காக திரினமூல் காங்கிரஸ் போராடியபோது இந்தப் பகுதி மக்கள் கொடுத்த ஒத்துழைப்புக்குப் பரிசாக இந்த சிங்கூர் - ஹவுரா ரயில் சேவை தொடங்கப்படுகிறது என்றார் மமதா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications