புதுச்சேரி சட்டசபையில் அமளி-அதிமுக, பாமக வெளிநடப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. அதிமுக, பாமக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
காலை 9.30 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய சட்டசபை கூட்டத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக புதிதாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட இக்பால் சிங் தனது உரையை நிகழ்த்தினார்.
முன்னதாக சட்டசபைக்கு பாமக எம்எல்ஏக்கள் 3 பேரும் அரிக்கேன் விளக்குகளுடன் வந்தனர். துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தனது உரையை துவக்கியவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர், ஓமலிங்கம், பாமக எம்எல்ஏக்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம், அருள்முருகன் ஆகியோர் எழுந்து நின்று கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை என்று குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஆளுநர் உரையை தொடர்ந்து படித்தார். இதனால் பெரும் குழப்பம் நிலவியது. இந் நிலையில் அதிமுக, பாமக எம்எல்ஏக்க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத்தில் கடந்த முறை எதிர் வரிசையில் இருந்த புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், கணபதி, ஆனந்து ஆகியோர் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் வந்து அமர்ந்திருந்தனர்.
அதே நேரத்தில் கடந்த முறை ஆளும்கட்சி வரிசையில் இருந்த பாமக எம்எல்ஏக்கள் எதிர் வரிசையில் அமர்ந்தனர்.
இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நாஜீம், முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அவரது ஆதரவாளரான நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.
துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் தனது உரையை ஆங்கிலத்தில் படித்து முடித்த பின் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ராதாகிருஷ்ணன் படித்தார். இதையடுத்து அவை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் 5ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications