இளையாங்குடி இடைத் தேர்தலை எதிர்த்து திடீர் வழக்கு
சென்னை: இளையாங்குடியில் இடைத் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மக்கள் மாநாட்டுக் கட்சி என்ற கட்சியின் மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், எங்களது கட்சியைச் சேர்ந்த கலைமணியின் வேட்பு மனுவில் முன்மொழிந்தவரின் வாக்காளர் பட்டியல் எண் மாறியிருப்பதாக கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஆனால் இதே காரணத்தைக் காட்டி தள்ளுபடி செய்யப்பட்ட பர்கூர் தேமுதிக வேட்பாளர் சந்திரன், ஸ்ரீவைகுண்டம் சுயேச்சை வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் பின்னர் ஏற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் பலன் இல்லை.
எனவே எங்களது வேட்பாளரின் பெயரை வேட்பாளர் பட்டியலில் இடம் பெறச் செய்ய உத்தரடவட வேண்டும். அதுவரை தேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்றே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி சுகுணா அறிவித்தார்.












Click it and Unblock the Notifications