இனி அன்புமணி அமைச்சராகவே மாட்டார்-ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

Ramdoss with Anbumani
திருவண்ணாமலை: இனி பாமக தேர்தலில் வெற்றி பெற்றாலும், அன்புமணி அமைச்சராக மாட்டார் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

தேர்தலிலேயே போட்டியிட மாட்டோம், என் குடும்பத்தில் யாருமே அரசியலுக்கு வர மாட்டார்கள், என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அரசியல்-அமைச்சர் பதவிகளுக்கு வர மாட்டோம் என்றெல்லாம் ஏற்கனவே கூறியவர் தான் ராமதாஸ். ஆனால், அவர் தந்த உறுதிமொழிகளை அவரே மீறினார்.

இந் நிலையில் திருவண்ணாமலையில் மாவட்ட பாமக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,

மூன்று ஆண்டுகளாக திமுகவுக்கு பாமக கொடுத்த குடைச்சல் தாங்க முடியாமலும், மேலும் இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்று கருதியும் தான் பாமகவை அழிக்க திமுகவினர் சதி செய்கின்றனர்.

இன்றைக்கு இந்தியாவில் பொருளாதாரத்தில் குஜராத் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. அங்கு சில நாட்களுக்கு முன் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, கள்ளச் சாராயம் குடித்து இறந்தால் அதில் தொடர்புடையவருக்கு தூக்கு தண்டனை, கள்ளச் சாராய
ஒழிப்பில் மெத்தனம் காட்டும் அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதே போன்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். திமுக, மற்றும் அதிமுக கட்சிகளுக்கு இணையாக விரைவில் பாமகவும் வளர்ச்சி பெறும்.

தற்போது, பாமக சந்தித்தித்த தேர்தல் தோல்வியைப் போல் மற்ற கட்சிகளும் தோல்வியடைந்து தான் வெற்றி பெற்று வளர்ந்துள்ளன.

அடுத்து வரும் தேர்தலில் பாமக வெற்றி பெற்றாலும், அமைச்சராக பதவி ஏற்கமாட்டேன் என அன்புமணி என்னிடம் கூறியுள்ளார். அவர் கட்சியை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். எனவே கட்சியினர் அனைவரும் அவரின் ஆர்வத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+