உச்சரிப்பில் கொல்லும் வட இந்தியர்கள்-ஸ்பெல்லிங்கை மாற்றினார் அழகிரி

வாயிலேயே நுழையாத பெயர் உடையவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள்தான். விதம் விதமான பெயர்களாக இருக்கும். ஆனாலும் கூட தென்னிந்தியர்கள், இந்தப் பெயர்களை சிரமப்பட்டு உச்சரித்து விடுவார்கள். கிட்டத்தட்ட சரியாகவே பேசி விடுவார்கள்.
ஆனால் வட இந்தியர்கள் அப்படி அல்ல. அவர்கள் வாயில் நுழைகிற பெயர்களை மட்டுமே சரியாக சொல்வார்கள். மற்றவற்றை குத்காவைப் போட்டு குதப்பித் துப்புவது போல கொத்தி எடுத்து விடுவார்கள்.
அதிலும் சுத்தத் தமிழ்ப் பெயர்களை அவர்கள் சொல்லும் அழகே தனிதான். இது நம்ம பெயர்தானா என்று நமக்கே பயம் வந்து விடும். தூய தமிழ்ப் பெயர்களை வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே போனாலே சிக்கல்தான்.
அப்படி ஒரு சிக்கலில் நம் மு.க.அழகிரி இப்போது சிக்கி தடுமாறிப் போயிருக்கிறார். அவரது பெயரை ஒருவர் கூட இதுநாள் வரை ஒரு முறை கூட சரியாக உச்சரித்ததில்லையாம். பிரதமர் முதல் சக அமைச்சர்கள் வரை யாருக்குமே அவரது பெயரை சரிவர சொல்லத் தெரியவில்லையாம்.
மேலும், ஆங்கில மீடியாக்களும், இந்தி மீடியாக்களும் அழகிரியின் பெயரை உச்சரிக்கும் அழகைப் பார்த்து அவர் பயந்தே போய் விட்டார்.
இந்தப் பஞ்சாயத்தே வேண்டாம் என தற்போது தனது பெயரில் வரும் ஸ்பெல்லிங்கை மாற்றி விட்டார். இதுநாள் வரை தனது பெயரை Azhagiri என்று ஆங்கிலத்தில் எழுதி வந்தார் அழகிரி. தற்போது அதை Alagiri மாற்றியுள்ளார். இதை முறைப்படி கெஜட்டிலும் பதிவு செய்து விட்டாராம்.
தமிழின் சிறப்பு எழுத்து ழகரம். இதை ஆங்கிலத்தில் எழுதும்போது zh என்று போடுவது தமிழர்களின் வழக்கம். இது நமக்குப் புரியும். ஆனால் வட இந்தியர்கள் இதை ஜா அல்லது ஸா என்று உச்சரிக்கிறார்கள். இதனால் ஆரம்பத்தில் அழகிரியை அஸகிரி என்று கூட மீடியாக்கள் கூறின.
முன்பு கனிமொழிக்கும் கூட இந்த சிக்கல் வந்ததாம். கனிமொழியின் பெயரை வடக்கத்தியர்கள் கடித்துக் குதறிக் கூறுவதைக் கேட்கும்போது ஏதோ நமது பெயரைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக் கொள்வாராம் கனிமொழி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications