விளம்பர பலகைகள்-மேயர், கமிஷனர் மீது டிராபிக் ராமசாமி வழக்கு!
சென்னை: சென்னை நகரில் மீண்டும் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து மாநகராட்சி மேயர், காவல்துறை ஆணையர் ஆகியோர் மீது சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,
சென்னை நகரில் உள்ள சாலை ஓரங்களில் அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டும் என 28.4.2008 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்று நகரம் முழுவதும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு வந்தன.
ஆனால் இப்போது சில இடங்களில் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் வகையில், விளம்பர பலகை வைக்கலாம் என்று மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இது கோர்ட்டு உத்தரவை மீறும் செயலாகும்.
மாநகராட்சி நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கி இருந்தாலும் அதற்கு முன்பே பலகைகளை வைத்து விடுகின்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் பல நாட்கள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன.
கோர்ட்டு உத்தரவை மீறி விளம்பர பலகை வைத்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கோர்ட்டு அவமதிப்பாகும்.
எனவே மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், ஆணையர் ராஜேஷ் லக்கானி, காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஷோபனா ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications