தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் இலவச டிவி
புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் வைத்திலிங்கம் கூறினார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வைத்திலிங்கம்.
அதன் முக்கிய அம்சங்கள்:
-தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 2 கறவை பசுக்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பதில் இனி ஒரு கறவை பசு (ரூ.12,000 மிகாமல்) இலவசமாக வழங்கப்படும்.
-ஏனாமில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்,
-புதுச்சேரி மாநிலத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
-இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி சந்திப்புகளில் ரூ.100 கோடியில் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.
-புதிதாக 50 பேருந்துகள் வாங்கப்படும்.
-வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகளை இலவசமாக வழங்கப்படும்.
-மாஹே மற்றும் ஏனாமில் ஆற்று உல்லாச படகு சேவையும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடல் உல்லாச படகு சேவையும் அமல்படுத்தப்படும்.
-புதுச்சேரியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமும், நீச்சல் குளமும் உருவாக்கப்படும்.
-காரைக்கால் பொது மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு துவக்கப்படும்.
-புதுச்சேரி, மாஹே மற்றும் ஏனாமில் கடற்கரை காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓ.எம்.சக்தி சேகர், ஓமலிங்கம் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் விஸ்வநாதன், கலைநாதன் ஆகியோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட்டை வாசித்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்ப செய்தனர். அதேபோல பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருந்த போது திமுக எம்எல்ஏக்களான சிவா, ராஜாராமன், நந்தா சரவணன் ஆகியோர் பட்ஜெட்டில் புதுச்சேரியும், காரைக்காலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.
இது குறித்து மானியக் கோரிக்கைகளின்போது நீங்கள் பேசலாம் என்று சபாநாயகர் கூறியதையடுத்து அவர்கள் அமைதியாக அமர்ந்தனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications