ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவரது சொந்த ஊரான ஆலங்குளத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வாக்கிங் சென்ற அவரது நண்பரும், ஆசிரியருமான பொன்ராஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.
கல்வி நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக அருணாவுக்கும், ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நெல்லை செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் எஸ்.ஏ.ராஜா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அழகர், பாலா ஆகிய இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. அதேபோல தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அழகரும், பாலாவும் அப்பீல் செய்தனர்.
இந்த அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிகள் பானுமதி, மாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
அதன்படி எஸ்.ஏ. ராஜாவின் விடுதலை ரத்து செய்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாலா, அழகர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கண்ணன், பரமசிவன், அர்ஜூன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications