சிறப்பு பொருளாதார மண்டல டெலவப்பர்கள் சங்கம் தொடங்கினர்
சென்னை: சிறப்பு பொருளாதார மண்டலங்களின் டெவலப்பர்கள் இணைந்து புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு சிறப்பு பொருளாதார மண்டல அடிப்படைக் கட்டமைப்பு டெவலப்பர்கள் சங்கம் (Tamil Nadu Association of SEZ Infrastructure Developers) என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுனில் ரல்லான் கூறுகையில், தமிழக அரசுடன் இணைந்து, சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்த இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 31 சிறப்புப் பொருளாதார மண்டல டெவலப்பர்களில் இதுவரை 22 பேர் எங்களுடன் இணைந்துள்ளனர். மற்றவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
சங்கத்தின் முதல் கூட்டம் ஜூலை 30ம் தேதி நடந்தது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பி்ரச்சினைகள் குறித்து பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு இந்த சங்கம் உதவும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான சட்டம் வெறும் பேச்சளவில் உள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சிறப்புப் பொருளாதார மண்டங்கள் முத்திரைத்தாள் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய வர்த்தகத்துறை அறிவித்துள்ளது. இதை மாநில அரசுக்குத் தெரியப்படுத்தி அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications