நொய்டா மாயாவதி பூங்காவில் மத்திய குழு ஆய்வு
டெல்லி: உ.பி. மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மாயாவதியின் ராட்சத சிலைகள் அடங்கிய பூங்காவை இன்று மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
நொய்டா, 15ஏ செக்டாரில் இந்த பிரமாண்ட பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்குள் மாயாவதியின் பிரமாண்டமான சிலைகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.
இந்தப் பூங்காவுக்கு கெளதம புத்தா பூங்கா என்று பெயரிட்டுள்ளார் மாயாவதி. இந்த கட்டுமானப் பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி விட்டதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கட்டுமானம் நடந்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி ஒரு சுற்றுச்சூழல் கமிட்டியை நியமித்தது.
இதையடுத்து இந்த கமிட்டியைச் சேர்ந்தவர்கள் இன்று சம்பந்தப்பட்ட பூங்காவைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தப் பூங்கா, இந்தியாவின் மிக மிக அரிதான பறவைகள் வசித்து வரும் ஓக்லா பறவைகள் சரணாலயத்திற்கு 20 அடி தொலைவில் உள்ளது.
மேலும், பூங்கா அமைப்பதற்காக 20 ஆயிரம் மரங்களை வெட்டி தள்ளி விட்டார்கள் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பூங்கா வளாகத்திற்குள் மாயாவதி மற்றும் மறைந்த கன்ஷிராமின் 30 சிலைகள் உள்ளன.
மேலும், இந்த பூங்காவை அமைப்பதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியும் பெறப்படவில்லை.
இங்கு கட்டப்பட்டுள்ள பெரிய பெரிய கட்டடங்களால் அருகில் உள்ள பறவைள் சரணாலயத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications