தமிழகம்: இளைஞர் காங்.கை பலப்படுத்த ராகுல் திட்டம்
சென்னை: தமிழகத்தில் இளைஞர் காங்கிரசை பலப்படுத்தும் தீவிரமான முயற்சிகளில் அதன் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பலப்படுத்தி வரும் ராகுல்காந்தி அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டுள்ளார்.
18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மட்டுமே இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள ராகுல் வயது சான்றிதழுடன் தான் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
35 வயதை தாண்டியவர்கள் இளைஞர் காங்கிரசில் இருக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ள ராகுல் அவர்களுக்கு கட்சியில் வேறு பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் பஞ்சாப், குஜராத், புதுச்சேரி மாநிலங்களில் இளைஞர் காங்கிரசுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அந்த அமைபுக்கு தேர்தலும் நடத்தப்பட்டது.
அதே போல தமிழ்நாட்டிலும் இளைஞர் காங்கிரசுக்கு உறுப்பினர் சேர்ப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளை மேற்பார்வையிடவும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு தேர்தலை நடத்தவும் ஆந்திராவை சேர்ந்த உஷா நாயுடு, கர்நாடகத்தைச் சேர்ந்த சூரஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில இளைஞர் காங்கிரசுக்கு தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள ராகுல் சமீபத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வரை வரும் 11ம் தேதி சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் ராகுல்.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியே அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாகத் தெரிகிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications