மேலும் 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் - புனேவில் 2 பேர் கவலைக்கிடம்

இந்தியாவிலேயே பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நகராக புனே மாறியுள்ளது. அங்கு ரீடா ஷேக் என்ற பள்ளிச் சிறுமி பன்றிக் காய்ச்சலுக்கு இறந்த நிலையில் மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் இருவரும் ஆண்கள். இருவரும் செயற்கை சுவாசத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தனியார் டாக்டர் ஆவார். அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செயற்கை சுவாசம் தரப்பட்டு வருகிறது.
35 வயதான இன்னொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் செயற்கை சுவாசம் தரப்பட்டு வருகிறது. இவர் ஒரு பார்மசிஸ்ட் ஆவார். இவருக்கு ஏற்கனவே இதய நோயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரது நிலையும் பயப்படும் படி இல்லை என்றாலும் கூட கவலைக்கிடமான நிலையிலிருந்து இருவரும் இன்னும் மீளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சஸ்ஸூன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 23 பேருக்கு பாதிப்பு...
இதற்கிடையே நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புதிதாக 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.
இவர்களில் 11 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். எட்டு பேர் புனே மற்றும் நான்கு பேர் மங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுவரை இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதக்கப்பட்டோரின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications