மட்டன் பிரியாணி கேட்டு சாப்பாட்டை எறிந்த கசாப்!

இதுகுறித்து ஆர்தர் சாலை சிறை நிர்வாகிகள், தனி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் கூறியுள்ளனர். இதையடுத்து கசாப்பை கடுமையாக கண்டித்த நீதிபதி தஹிளியானி, இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், கசாப் இப்படி தட்டை தூக்கி எறிவது முதல் முறையல்ல. முன்பும் கூட ஒருமுறை இப்படி சாப்பாட்டை தூக்கி எறிந்துள்ளான். புதன்கிழமையும் இதுபோல சாப்பாடு தரப்பட்டபோது அதை வேண்டாம் என்று கூறி தூக்கி எறிந்து விட்டான். மேலும் தட்டை எடுத்து தனது அறை சுவற்றில் வைத்து மோதி நசுக்கி விட்டான்.
மேலும், இனிமேல் சாப்பிடவும் மாட்டேன் என்று பிடிவாதமாக கூறினான். இதையடுத்தே நீதிமன்றத்தில் தெரிவிக்க நேரிட்டது என்றனர்.
பிற கைதிகளுக்கு என்ன சாப்பாடு தரப்படுகிறதோ அதையேதான் கசாப்புக்கும் தருகிறோம் என்றும் சிறை அதிகாரிகள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட நீதிபதி சிறை அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாயா என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று கூறினான் கசாப்.
அப்போது குறுக்கிட்ட அரசு சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், கசாப் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் நடந்து கொள்கிறான். ஒவ்வொரு தந்திரமாக செய்து வருகிறான்.
ரக்ஷா பந்தன் தினத்தன்று தனக்கு யாராவது ராக்கி கட்ட மாட்டார்களா என்று சிறைக் காவலர்களிடம் கேட்டுள்ளான். இந்த செய்தி மீடியாக்களி்ல் வந்துள்ளது. நாம் இப்படிக் கேட்டால் அது மீடியாக்களி்ல வரும் என்று தெரிந்தேதான் கசாப் இவ்வாறு கேட்டுள்ளான். இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபத்தை சந்திக்க அவன் முயலுகிறான் என்றார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications