சுதந்திர தினத்தன்று நாச வேலைக்கு சதி - டெல்லியில் 2 தீவிரவாதிகள் கைது

சுதந்திர தினத்தன்று டெல்லியில் நாச வேலையில் ஈடுபட இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
டெல்லியின் தார்யாகஞ்ச் பகுதியில், வெள்ளை நிற சான்ட்ரோ காரில் போய்க் கொண்டிருந்த ஜாவேத் அகமது, ஆஷிக் அலி ஆகிய அந்த இரு தீவிரவாதிகளையும் சிறப்புப் பிரிவு போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
மகாவீர் பார்க்கிங் பகுதியில் அவர்கள் இருவரும் பிடிபட்டதாக இணை ஆணையர் அகர்வால் தெரிவித்தார்.
அவர்களின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு முன்பே தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரையும் பிடிக்க போலீஸார் வலை விரித்துக் காத்திருந்து பிடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15ம் தேதியன்று டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா நகரங்களில் தீவிரவாத செயல்களில் ஈடுபட லஷ்கர் இ தொய்பா அமைப்பு சதித் திட்டம் தீட்டியுள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் டெல்லியில் 2 தீவிரவாதிகள் பிடிபட்டிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
பிடிபட்ட இருவரிடமிருந்தும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் 2, 100 தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications