பலாலி விமான தளத்தை சீரமைக்கு இலங்கைக்கு இந்தியா ரூ. 117 மில்லியன் நிதியுதவி

இங்குள்ள ரன்வே உள்ளிட்டவற்றை சீரமைக்க இந்தியா வழங்கியுள்ள 2வது கட்ட நிதியுதவி இது.
யாழ் குடாவில் உள்ள பலாலி விமானப்படை தளம், அருகில் உள்ள காங்கேசன் துறை துறைகமும் உள்ளிட்ட பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்து அங்குள்ள நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இங்கு மக்கள் வசிக்க முடியாது என்றும் கூறி விட்டது.
காங்கேசன்துறை துறைமுகத்தில் மூடிக் கிடக்கும் சிமென்ட் பேக்டரியை மீண்டும் திறக்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. மேலும் காங்கேசன் துறை துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணியை இந்தியாவிடம் ஒப்படைக்கவும் அது திட்டமிட்டுள்ளது. இந்தப் பகுதி முழுவதையும், ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசு இவற்றை தமிழ் மக்களிடம் மீண்டும் கொடுக்காது என்று கூறப்படுகிறது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் தமிழர்கள் வசித்து வந்தனர். ஆனால் அனைவரையும் உயர் பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் வீடுகளை விட்டு அகற்றி விட்டது இலங்கை ராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூறுகையில், ஈழத் தமிழ்களின் நிலங்களை கொள்ளையடித்து வருகிறது இலங்கை அரசு. அதற்கு இந்தியா துணை போகிறது. ஈழத் தமிழர்களின் நலன்களை இரு அரசுகளும் புறக்கணித்து விட்டன.
இப்பகுதியின் வரலாற்றுத் தன்மையை மாற்றியமைக்கும் நோக்கில்தான் உயர் பாதுகாப்பு வளையம் என்ற பெயரி்ல தமிழர்களின் நிலங்களைப் பறித்து வருகிறது சிங்கள அரசு என்றார் அவர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications