உள்ளாட்சித் தேர்தல் - யாழ், வவுனியாவில் வாக்குப் பதிவு தொடக்கம்
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகராட்சிகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
வாக்குப் பதிவு அமைதியாக நடந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குப் பதிவு அமைதியாக இருந்தாலும் கூட மக்கள் கூட்டம் அதிக அளவில் இல்லை.
இதேபோல, தெற்கில் உள்ள ஊவா மாகாண சபைக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீடியாக்களுக்கு தடை..
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மீடியாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள் 1,25,000 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தேர்தல் நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனி ஆகிய இரு நகரங்களும் வன்னி போர்க் களத்திற்கு வெகு அருகில் உள்ளவையாகும்.
போர் முடிந்த பகுதிகளில் தற்போது போர் நடத்தப்படவில்லை. மாறாக ஏற்கனவே பிடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மட்டும் நடத்தப்படுகிறது. வவுனியா வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், வவுனியா தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை ஐக்கிய தேசிய கட்சி என்ற பெயரில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications