தேமுதிகவுடன் யாரும் நேரடியாக மோத முடியாது - விஜயகாந்த்

ஸ்ரீவைகுண்டம் தேமுதிக வேட்பாளராக சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்த இடைத் தேர்தல் போராட்டம் நிறைந்த தேர்தலாகும். விஜயகாந்த் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கவா போகிறார் என சொல்லி ஆளும்கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதற்காக பல்வேறு சலுகைகளை உங்களுக்கு வாரி வழங்குகின்றனர்.
மக்கள் சொல்ல வேண்டும்...
தேமுதிகவுடன் அவர்களால் நேரிடையாக மோத முடியாது. மக்களை ஏமாற்றுவதை மட்டுமே அவர்கள் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். உங்கள் சாதனைகளை (திமுக) நீங்களே சொல்ல கூடாது, மக்கள் சொல்ல வேண்டும்.
காமராஜர் கல்விக்கு கண் கொடுத்தார். அது சாதனை. மதராஸ் மாகாணத்தை சென்னையாக மாற்றினார் அண்ணா. அது சாதனை. பள்ளி கூடத்தில் சத்துணவு தந்தார் எம்ஜிஆர். அது சாதனை. இவற்றுக்கு மத்தியில் நடக்கும் ஆட்சி செய்துள்ளது சாதனை அல்ல. அவர்கள் கொடுக்கும் வேதனை.
மக்களே உங்களுக்காகத்தான் பேசுகிறேன்..
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியால் ஏன் விலைவாசியை கட்டு படுத்த முடியவில்லை. நீங்கள் என்னை ஜெயிக்க வைக்கவில்லை. ஆனாலும் நான் உங்களுக்காக தான் பேசுகிறேன். உங்களை ஆளும் கட்சியே ஏமாற்றி வருகிறது. இந்தியாவில் வறுமை இன்னும் ஓயவில்லை. குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
காசு வாங்குவதால் என்ன லாபம்..
ஓட்டுக்காக நீங்கள் பணம் பெறுவதை நான் குறை சொல்லவில்லை. அதனால் உங்களுக்கு என்ன லாபம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சிரமப்படுகின்றனர். தமிழகத்தில் 9 லட்சம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையவில்லை.
அவர்கள் கூறுவதுபோல ஆட்சியில் தோனாறும், பாலாறும் ஓடவில்லை. மக்களிடையே வறுமைதான் தலை விரித்தாடுகிறது.
நான் எல்லா சவால்களையும் சந்தித்தவன். அதனால் தனியாக நிற்கிறேன். நான் காசுக்கு ஆசைபடுபவன் அல்ல. எனது தொண்டர்கள் துவளாமல் பாடுபடக் கூடியவர்கள் என்றார் விஜயகாந்த்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications